விநாயகர் சதூர்த்தி பரிசாக ரஜினியின் ‘2.0’ டீசர்?
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பல மாதங்களாக தயாராகி வரும் திரைப்படம் ‘2.0’. இதனை ஷங்கர் இயக்கி வருகிறார். 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் வேலைகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. கடந்த வருடம் அக்டோபர் மாதம் துபாயில் இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து. இதனை தொடர்ந்து பல கட்டங்களில் படத்தின் புரமோஷன் செய்திகள் வெளியாகின. படத்தின் விஎஃப்எக்ஸ் வேலைகள் தாமதமாவதால் படத்தின் திரையிடல் தள்ளிப்போவதாக செய்தி வெளியாகவே அதனை லைகா நிறுவனம் முன் வந்து விளக்கம் அளித்ததிருந்தது.
இந்நிலையில் இயக்குநர் ஷங்கர், செப்டம்பர் 13 விநாயகர் சதூர்த்தி அன்று ‘2.0’ படத்தின் டீசரை வெளியிட திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகின்றது. இது குறித்த செய்தி ரஜினி ரசிகர்கள் இடையே மிக வேகமாக பரவி வருகிறது. ஆனால் இந்தத் தகவலை படக்குழு இன்னும் உறுதி செய்யவில்லை.
‘2.0’வில் நடிகை எமிஜாக்சன், அக்ஷய்குமார், சுதன்ஷு பாண்டே போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதற்கு ஜெயமோகன் திரைக்கதை எழுதியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். வரும் நவம்பர் மாதம் 29ம் தேதி படம் திரைக்கு வரும் என்று ஏற்கெனவே அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்திருந்தது.