“என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி” - சிறப்பு விருது பெற்றபின் ரஜினி பேச்சு

 “என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி” - சிறப்பு விருது பெற்றபின் ரஜினி பேச்சு

 “என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி” - சிறப்பு விருது பெற்றபின் ரஜினி பேச்சு
Published on

கோவாவில் 50வது சர்வதேச திரைப்படவிழாவையொட்டி ரஜினிகாந்துக்கு “ICON OF GOLDEN JUBLEE"  விருது வழங்கப்பட்டது. 

இந்த விருதை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோர் ரஜினிகாந்துக்கு வழங்கினர். அப்போது, ‘என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி’ என விழா மேடையில் தமிழில் ரஜினிகாந்த் பேசினார். 

மேலும் “எனக்கு விருது வழங்கி கவுரவித்த இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், கோவா முதல்வர், எனக்கு முன்மாதிரியாக திகழும் அமிதாப் பச்சன் ஆகியோருக்கு நன்றி. தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் ரசிகர்களுக்கு இந்த விருதை சமர்பிக்கிறேன்.” எனத் தெரிவித்தார். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com