''அண்ணாத்த பட ஷூட்டிங்கை முடிப்பதும் என் கடமை'' - ரஜினி
அண்ணாத்த ஷூட்டிங்கை முடிக்க வேண்டியது என் கடமை என ரஜினி தெரிவித்துள்ளார்
அரசியல் கட்சி தொடங்குவது குறித்து ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். , “ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிப்பு. மாத்துவோம். எல்லாத்தையும் மாத்துவோம். இப்ப இல்லைன்னா எப்பவும் இல்ல. வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம், அதியம் நிகழும்” எனத் தெரிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்தாச்சு என தீர்க்கமாக தெரிவித்தார். மேலும், ''அண்ணாத்த ஷூட்டிங்கை முடிக்க வேண்டியது என் கடமை. இன்னும் 40% வேலை மீதமிருக்கிறது. அது தொடர்பாக கவலைப்பட தேவையில்லை. முடித்துக்கொடுக்க வேண்டியது என் கடமை. இன்னமும் கட்சி வேலைகள் பல உள்ளன. படத்தை முடித்துவிட்டு கட்சிப்பணியில் நான் இறங்குவேன் என தெரிவித்தார். மேலும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன் மூர்த்தி என்பவரையும், கட்சிமேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் ரஜினி அறிமுகம் செய்தார்.