ஹுமாவுக்கு ரஜினி கொடுத்த விருந்து!

ஹுமாவுக்கு ரஜினி கொடுத்த விருந்து!

ஹுமாவுக்கு ரஜினி கொடுத்த விருந்து!
Published on

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ஹுமா குரேஸி, நானா படேகர், சமுத்திரக்கனி நடிக்கும் படம், ’காலா’. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயண் இசை அமைக்கிறார். முரளி ஒளிப்பதிவு செய்கிறார். 
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், படத்தின் ஹீரோயின் ஹூமாவுக்கு திடீர் விருந்தளித்துள்ளார் ரஜினி. பல்வேறு வகைகளை கொண்ட முழு சைவச் சாப்பாடான அதை, புகைப்படம் எடுத்து டிவிட்டரில் வெளியிட்டுள்ள ஹுமா, ‘உங்கள் உணவுக்கு நன்றி ரஜினி சார்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com