மேக்-இன்-இந்தியா ரோபோ 2.0

மேக்-இன்-இந்தியா ரோபோ 2.0

மேக்-இன்-இந்தியா ரோபோ 2.0
Published on

ரஜினிகாந்த், எமி ஜாக்சன், இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் நடிக்கும் படம், ’2.ஓ’. ஷங்கர் இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். டெக்னாலஜிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப் படம் முற்றிலும் இந்திய தொழில்நுட்ப நிபுணர்களின் உதவியோடு உருவாகி வருகிறது.

பொதுவாக தொழில்நுட்ப அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்திய திரைப்படங்கள், வெளிநாட்டு நிறுவனங்களின் உதவியுடன் எடுக்கப்படுவதுதான் வழக்கம். ஆனால் ‘2.ஓ’ படம் முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்ப வல்லுனர்களின் உதவியுடன் தயாராகி வருகிறது.

மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் தயாராகி வருகிறது. இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் தயாரிக்கப்படும் இந்தப் படத்தின் பட்ஜெட் சுமார் 400 கோடி ரூபாய் என்கிறது தயாரிப்பு நிறுவனம். தமிழ் தவிர ஜப்பான், கொரியா, மாண்டரின் உள்ளிட்ட 7 மொழிகளில் இப்படம் வெளியாகிறது.

இந்தப் படத்தின் இறுதிக்காட்சியில் ஒரு பாதி, புதுடெல்லியின் ஜவஹர்லால் நேரு அரங்கத்திலும், மறுபாதி ஈவிபி ஃபிலிம் சிட்டி, சென்னையிலும் படமாக்கப்பட்டுள்ளது. பொதுவாக திரைப்படங்கள் 2D-இல் எடுக்கப்பட்டு 3Dக்கு மாற்றப்படும். ஆனால், இந்தத் திரைப்படம் 3D தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தகைய முயற்சி இந்தியாவில் முதன்முறையானது என்பது குறிப்பிடத்தக்கது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com