ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் வெளியீடு!

ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் வெளியீடு!

ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் வெளியீடு!

நடிகர் ரஜினியின் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமாரின் படப்பிடிப்பு புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில், அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’, ‘பீஸ்ட்’ ஆகியப் படங்களைத் தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’. இந்த திரைப்படத்தின் கதாநாயகனாக ரஜினிகாந்த் நடித்து வரும்நிலையில், கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் தமன்னா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, எண்ணூர் மற்றும் கடலூரில் நடைபெற்று வந்தது. விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்புகளை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. ரஜினியின் 169 படமாக இந்தப் படம் உருவாகி வரும்நிலையில், திட்டமிட்ட தேதியில் படப்பிடிப்ப முடிவடைந்தால் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 14-ம் தேதி இந்தப் படத்தை வெளியிட படக்குழு யோசித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் தமிழ் புத்தாண்டு அன்று சன் பிக்சர்ஸின் துவங்கப்பட்ட தினம் என்பதால் கொண்டாட்டமாக அமையும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இந்தப் படத்தில் நடித்து வரும் ஷிவ ராஜ்குமாரின் படப்பிடிப்பு புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தப் படம் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும், இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தனது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் விக்ராந்த் - விஷ்ணு விஷால் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com