\
'நான் தான்டா இனிமேலு’ - வெளியானது தர்பார் ‘ஃபஸ்ட் சிங்கிள்’

'நான் தான்டா இனிமேலு’ - வெளியானது தர்பார் ‘ஃபஸ்ட் சிங்கிள்’

'நான் தான்டா இனிமேலு’ - வெளியானது தர்பார் ‘ஃபஸ்ட் சிங்கிள்’
Published on: 

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியது.

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. இதற்கான இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஆக்ஷன் வகையில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அவர் இசையில் உருவாகியுள்ள பாடல்களை வரும் 7-ம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். 

அதற்கு முன்பாக இன்று மாலை படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை சிங்கில் ட்ரேக் முறையில் வெளியிட திட்டமிட்டிருந்தனர். அதன்படி, பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். 'நான் தான்டா இனிமேலு' என தொடங்கும் இந்தப் பாடல், படத்தின் ஓப்பனிங் பாடலாக அமைந்துள்ளது. பேட்ட திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் அனிருத் இரண்டாவது முறை இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com