‘இதுக்குதான் இவ்ளோ நாளா வெயிட் பண்ணேன்’..புதுப்பொலிவுடன் ‘பாபா’ ட்ரெய்லர்! ரஜினி ட்வீட்!

‘இதுக்குதான் இவ்ளோ நாளா வெயிட் பண்ணேன்’..புதுப்பொலிவுடன் ‘பாபா’ ட்ரெய்லர்! ரஜினி ட்வீட்!
‘இதுக்குதான் இவ்ளோ நாளா வெயிட் பண்ணேன்’..புதுப்பொலிவுடன் ‘பாபா’ ட்ரெய்லர்! ரஜினி ட்வீட்!

 சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘பாபா’ திரைப்படம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, புதுப்பொலிவுடன் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளநிலையில், படத்தின் ட்ரெயிலரை நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த் படங்கள் வெளிவருகிறது என்றாலே திரையரங்குகள் எல்லாம் திருவிழாக் கோலம் போன்றது போல் பரபரப்பாக இருக்கும். அவ்வாறு கடந்த 2002-ம் ஆண்டு ரஜினிகாந்த், கதை - திரைக்கதை எழுதி, தயாரித்து, நடித்தப் படம் ‘பாபா’. இந்தப் படத்தில் மனீஷா கொய்ரலா, கவுண்டமணி, சங்கவி, சுஜாதா, ஆஷிஷ் வித்யார்த்தி, எம்.என் நம்பியார், விஜயகுமார், சாயாஷி ஷிண்டே, டெல்லி கணேஷ், கருணாஸ் எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

மேலும், ராகவா லாரன்ஸ் மற்றும் பிரபு தேவா ஆகியோர் பாடல்களில் சிறப்புத் தோற்றத்தில் வந்தனர். மேலும் ரம்யா கிருஷ்ணன், நாசர், ராதா ரவி, சரத் பாபு ஆகியோரும் சிறு காட்சியில் வந்து சென்றனர். பெரிய நட்சத்திரப் பட்டாளம், ரஜினிகாந்த் நடித்தது மட்டுமின்றி திரைக்கதையும் எழுதியிருந்ததால் கூடுதல் எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை. ஏ.ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். சுரேஷ் கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்கியிருந்தார். எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் வசனங்கள் எழுதியிருந்தார்.

ஆனால், இந்த திரைப்படம் வெளியான நேரத்தில் எதிர்பார்த்த அளவில் ஓடவில்லை. கலவமையான விமர்சனங்களை பெற்றது. தொழில்நுட்பம், இசை, நடிப்பு என நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருந்தால் கதை சொல்ல வரும் விஷயத்தில் சற்றே தடுமாற்றம் இருந்தது. அதுவும் இரண்டாம் பாதியில் கதையின் திசையும் நீளமும் ரசிகர்களை சோதித்தது. இதனால், பல இடங்களில் கடுமையான நஷ்டத்தையே சந்தித்தாக கூறப்படுகிறது.

 படத்தில் ஆன்மீக பாதையா, அரசியல் பாதையா என்ற குழப்பத்தில் இருக்கும் ரஜினி கடைசியில் அரசியல் பாதையை கையில் எடுக்கிறது போல் முடிவு இருக்கும். ஒருவேளை இந்த திரைப்படம் வெற்றி பெற்றிருந்தால் ரஜினி சில முக்கிய முடிவுகளை அப்பொழுதே எடுத்திருக்க வாய்ப்பிருந்ததாகவும் பேசப்பட்டது. 

‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’ போன்ற மாபெரும் வெற்றிப் படங்களை ரஜினிக்காக இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாவின் கைகளாலே தோல்வி படமும் கிடைத்தது. ‘பாபா’ முழுக்க முழுக்க ரஜினியின் கைவண்ணத்தில் உருவானதே அதற்கான காரணமாக கூறப்பட்டது.

ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘பாபா’ படத்தை மீண்டும் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், நவீன தொழிற்நுட்பத்துக்கேற்ப கலர் கிரேடிங், மீண்டும் படத்தொகுப்பு, பாடல்கள் புதிதாக ரீ மிக்ஸிங், சிறப்பு சப்தங்கள் என புதுப் பொலிவுடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தனஇதனால் படத்தின் ஒரு சில காட்சிகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் டப்பிங் பேசிய புகைப்படங்களும் வெளியாகி வைரலாகின. இந்நிலையில், இந்தப் படத்தின் ட்ரெயிலர் இன்று வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. ட்ரெய்லரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ரஜினி, “என்னுடைய மனதிற்கு எப்போதும் நெருக்கமான படம் பாபா. புதுப்பொலிவுடன் பாபா திரைப்படம் விரைவில் வெளியாகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு திரைப்படம் வெளியாகும் என்று ஏற்கனவே கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது ரஜினி விரைவில் என்று ஏன் கூறியுள்ளார் என தெரியவில்லை. ஒருவேளை டிசம்பர் 12க்குள் படத்தின் பணிகள் முடிவடைவதில் சிக்கில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com