ரஜினிக்கு இன்று 68 வது பர்த் டே: வருகிறது, மொபைல் ஆப்
நடிகர் ரஜினியின் 68ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், அவரது நடிப்பில் உருவாகி வரும் காலா படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியிருக்கிறது.
அந்தப் படத்தை தயாரிக்கும் வுண்டர்பார் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் இரண்டாவது போஸ்டரை நள்ளிரவு 12 மணிக்கு வெளியிட்டது. அதில் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கறுப்பு உடையுடன் காணப்படும் ரஜினி, மிரட்டலாக பார்ப்பதாக இருக்கிறது. ஏற்கனவே காலா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பிறந்த நாளை முன்னிட்டு, ரஜினிகாந்த் மொபைல் அப்ளிகேஷன் ஒன்றை வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அரசியல் பிரவேசம் இருக்கும் என்பதை ரஜினிகாந்துக்கு நெருங்கிய வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், மக்களுடன் தொடர்பு கொள்ளும் வகையில் மொபைல் அப்ளிகேஷன் இன்று வெளியாவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதேநேரம், இரண்டாம் கட்டமாக ரசிகர்களை சந்தித்த பின்னர் அப்ளிகேஷன் வெளியிடப்படலாம் எனவும் கூறப்படுகிறது.