ரஜினியின் ‘தலைவர் 168’ படம் வெளியீடு எப்போது?..  - கசிந்தது தகவல்கள்

ரஜினியின் ‘தலைவர் 168’ படம் வெளியீடு எப்போது?..  - கசிந்தது தகவல்கள்

ரஜினியின் ‘தலைவர் 168’ படம் வெளியீடு எப்போது?..  - கசிந்தது தகவல்கள்
Published on

‘தலைவர்168’ படம் எப்போது திரைக்கு வர உள்ளது என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ‘தலைவர் 168’. இதற்கு இன்னும் முறையாக தலைப்பு வைக்கப்படவில்லை. இதன் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. அதில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்ற கையோடு நடிகை கீர்த்தி சுரேஷ் பங்கேற்றார். அடுத்து குஷ்பு பங்கேற்று நடித்து வருகிறார். இப்படம் குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், ‘தலைவர் 168’ படம் எப்போது வெளியாக உள்ளது என்பது குறித்து தகவல் கசிந்து வருகிறது. அடுத்த ஆண்டு ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு இப்படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது அதிகாரப்பூர்வமான செய்தி இல்லை. இப்படத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப பிரிவை சார்ந்த சிலரும் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வரும் சிலரும் கூறி இருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

இப்படம் குறித்து சமீபத்தில் கிடைத்த தகவலின்படி சில தினங்களுக்கு முன் ரஜினிகாந்த், கிராமத்து தோற்றத்தில் பங்கேற்ற காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இதனிடையே ரஜினியின் ‘தர்பார்’ வரும் ஜனவரி மாதம் 9 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com