\
விரைவில் தொடங்கும் அண்ணாத்தே படப்பிடிப்பு?  கிழக்குக் கடற்கரைச் சாலையில் செட் அமைப்பு?

விரைவில் தொடங்கும் அண்ணாத்தே படப்பிடிப்பு? கிழக்குக் கடற்கரைச் சாலையில் செட் அமைப்பு?

விரைவில் தொடங்கும் அண்ணாத்தே படப்பிடிப்பு? கிழக்குக் கடற்கரைச் சாலையில் செட் அமைப்பு?
Published on: 

தமிழ் சினிமா மெல்ல புத்துணர்வை அடைந்து வருகிறது. ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்ட நிலையில், சின்ன பட்ஜெட் படங்கள் படப்பிடிப்பை நடத்தத் தொடங்கியுள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்தே படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கும் அண்ணாத்தே படத்தின் வேலைகள் கொரோனா காரணமாக முடங்கியிருந்தன. ஊரடங்கு அறிவிப்புக்கு முன்பு ஹைதராபாத் நகரில் படப்பிடிப்பு நடந்து வந்தது. தற்போது சென்னையில் நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள். அதற்காக கிழக்குக் கடற்கரைச் சாலையில் செட் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அங்கு ரஜினிகாந்த் சம்பந்தப்படாத காட்சிகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. செட் பணிகள் முடிந்ததும் கீர்த்தி சுரேஷ் - நயன்தாரா இருவரும் சேர்ந்து தோன்றும் காட்சிகளை எடுக்கவுள்ளார்கள். அண்ணாத்தே படப்பிடிப்பில் ஜனவரியில் ரஜினி பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே, அவர் படத்திற்கான 50 சதவீதமான காட்சிகளை முடித்துவிட்டார்.

தீபாவளி, பொங்கலைத் தாண்டி தமிழ்ப் புத்தாண்டில் படத்தை வெளியிடலாமா எனவும் தயாரிப்பாளர்கள் யோசித்து வருகிறார்களாம். இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பு, பிரகாஷ்ராஜ், சதீஸ், சூரி உள்ளிட்ட பெரும் நட்சத்திர கூட்டமே இருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com