\
’அண்ணாத்த’ படப்பிடிப்பு நிறைவு: ஹைதராபாத்திலிருந்து சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்

’அண்ணாத்த’ படப்பிடிப்பு நிறைவு: ஹைதராபாத்திலிருந்து சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்

’அண்ணாத்த’ படப்பிடிப்பு நிறைவு: ஹைதராபாத்திலிருந்து சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்
Published on

ஹைதராபாத்தில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்.

'தர்பார்' படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த்சிறுத்தைசிவா இயக்கத்தில் 'அண்ணாத்த' படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் ஆகியோரும் படத்தில் உள்ளனர். இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 4-ஆம் தேதி படம் வெளியாகிறது

கடந்த ஏப்ரல் மாதத்தில் முக்கிய காட்சிகளை ஹைதராபாத்தில் படமாக்கியது ‘அண்ணாத்த’ படக்குழு. இதில், ரஜினியும், நயன்தாராவும் காட்சிகள் நேற்று முன்தினம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்த தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் ரஜினிகாந்த். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளன.

 சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்டோர் நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற நிலையில், அங்கு முக்கிய காட்சிகளை இயக்குநர் படமாக்கியுள்ளார். இந்தநிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது. இதனால், படப்பிடிப்பை முடித்துக் கொண்டு ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com