\
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் ரஜினியிடம் நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் ரஜினியிடம் நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் ரஜினியிடம் நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்
Published on

ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்தை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், அவரது உடல்நலம் குறித்து கேட்டு அறிந்தார்.


கொரோனா பரவல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் கடந்த 14 ஆம் தேதி மீண்டும் தொடங்கியது. இதைத்தொடர்ந்து அண்ணாத்த படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியான நிலையில், படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் கொரோனா பரிசோதனை மேற்கோண்டதாகவும் அதில் அவருக்கு கொரோனா நெகட்டிவ் வந்ததாகவும் படக்குழு தகவல் தெரிவித்தது.

இந்நிலையில், இன்று ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக ரஜினிகாந்த் ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “ரஜினிகாந்துக்கு கொரோனா பாதிப்பு குறித்த எந்த அறிகுறியும் இல்லை. ரத்த அழுத்தம் சீராகும்வரை ரஜினிகாந்த் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார்” எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஹைதராபாத்தில் சிகிச்சைப் பெற்று வரும் ரஜினிகாந்தை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின்,ரஜினியின் உடல்நலம் குறித்து கேட்டு அறிந்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com