”சூப்பர்ப்”- க்யூப் பெட்டகங்களால் தனது உருவத்தை செதுக்கிய சிறுவனை பாராட்டிய ரஜினி
தனது உருவத்தை க்யூப் பெட்டகங்களை கொண்டு வடிவமைத்த சிறுவனுக்கு ரஜினிகாந்த் ஆடியோ வாயிலாக தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த அத்வைத் என்ற சிறுவன் 300 க்யூப் பெட்டகங்களை கொண்டு நடிகர் ரஜினிகாந்தின் உருவத்தை வடிவமைத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
அவர் பதிவிட்ட பதிவில், “ க்யூப் பெட்டகங்களை கொண்டு ரஜினிகாந்த் அவர்களின் உருவத்தை உருவாக்கி இருக்கிறேன். என்னுடைய 300 க்யூப் பெட்டகங்களை கொண்டு ரஜினிகாந்தின் உருவத்தை வடிவமைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதை ஆசிர்வாதமாக கருதுகிறேன் ” என்று குறிப்பிட்டு அவரது விவரங்களுடன் தனது வீடியோவையும் அதில் இணைத்திருந்தார்.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில் தனது உருவத்தை வடிவமைத்த சிறுவனை பாராட்டி ரஜினி ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட ஆடியோவில், “ சூப்பர்ப், கிரியேட்டிவ் வொர்க் அத்வைத். காட் ப்ளஸ்” என்று பாராட்டியுள்ளார். ரஜினிகாந்த் அத்வைத்தை பாராட்டிய ஆடியோ சமூகவலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.
முன்னதாக சிறுவன் அத்வைத் நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட நடிகர்களின் உருவத்தை க்யூப் பெட்டகங்களால் வடிவமைத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.