\
ரஜினி ரசித்த பைலட் ஃபிலிம்

ரஜினி ரசித்த பைலட் ஃபிலிம்

ரஜினி ரசித்த பைலட் ஃபிலிம்
Published on

ரஜினிகாந்த் பைலட் ஃபிலிம் ஒன்றை லேப் டாப்பில் கண்டு ரசித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

‘சென்னை என்கிற மெட்ராஸ்’ என்ற தலைப்பில் ஒரு பைலட் ப்லிம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லரை நடிகர் ரஜினிகாந்திற்கு போட்டுக் காட்டியுள்ளது படக்குழு. இதனை அரவிந்த் குமார் இயக்கி இருக்கிறார். அது என்ன பைலட் ஃபிலிம்? பல காட்சிகளை 360 டிகிரி வடிவில் சுற்றி சுற்றிக் காட்டுகிறது கேமரா. நாயகன் புல்லட் வாகனத்தில் பயணிப்பதை ஒரு வட்டப்பாதையில் அப்படியே காட்சியாக காண்பிக்கிறது இந்தப் படத்தின் கேமரா. ஆகவே அதன் விஷூவல் ட்ரீமெண்ட் புதுமையாக உள்ளது. காணும் காட்சியை அப்படியே பருந்துப் பார்வையில் பார்வையாளர் முன் வைக்கிறது இந்த ட்ரெய்லர். ஆகவே அதை கண்ட ரஜினி மிக வியப்பில் ஆழ்ந்திருக்கிறார்.

புதிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த ட்ரெய்லரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com