ரஜினியின் ‘காலா’ ரீலிஸ் தேதி அறிவிப்பு

ரஜினியின் ‘காலா’ ரீலிஸ் தேதி அறிவிப்பு

ரஜினியின் ‘காலா’ ரீலிஸ் தேதி அறிவிப்பு
Published on

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘காலா’ படம் ஏப்ரல் மாதம் 27ம் தேதி உலகெங்கும் ரீலிஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘கபாலி’ வெற்றிக்கு பின் நடிகர் ரஜினிகாந்த் - இயக்குநர் பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘காலா’. சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைத்துள்ளார். நடிகரும், ரஜினியின் மருமகனுமான தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் தயாராகியுள்ள இப்படம், வரும் ஏப்ரல் மாதம் 27ம் தேதி உலகெங்கும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ரஜினி கடந்த டிசம்பர் மாதத்தில்தான் தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பு வெளியிட்டார். கட்சியின் பெயரை இன்னும் அறிவிக்கவில்லையென்றாலும் தொண்டர்கள் சேர்ப்பு பணிகளில் மும்முரமாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அவரின் அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பின் வெளியாகும் முதல் படம் ‘காலா’ என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com