பாராட்டிய ரஜினிகாந்த்... நெகிழ்ந்து போன எஸ்.ஜே. சூர்யா !

பாராட்டிய ரஜினிகாந்த்... நெகிழ்ந்து போன எஸ்.ஜே. சூர்யா !

பாராட்டிய ரஜினிகாந்த்... நெகிழ்ந்து போன எஸ்.ஜே. சூர்யா !
Published on

’மாநாடு’ படக்குழுவினரை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியிருக்கிறார்.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் பல்வேறு தடைகளையும் நெருக்கடிகளையும் கடந்து சிம்புவின் ‘மாநாடு’ கடந்த 25 ஆம் தேதி வெளியானது. வெற்றிப் படமாக அமைந்துள்ளதாக இதுவரை வெளியான விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். முதல் நாளிலேயே ‘மாநாடு’ படம் தமிழகம் முமுக்க ரூ.8 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ’மாநாடு’ பார்த்துவிட்டு நடிகர் எஸ்.ஜே சூர்யா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, சிம்பு, வெங்கட் பிரபு உள்ளிட்டோரை போனில் தொடர்பு கொண்டு படத்தை பாராட்டி வாழ்த்தியுள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் உற்சாகமுடன் நடிகர் எஸ்.ஜே சூர்யா, “இன்று எனது நடிப்புத் திறமைக்காக எனக்கு மிகப்பெரிய விருது கிடைத்ததாக உணர்கிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் எனக்கு போன் செய்து வாழ்த்தினார். உங்கள் அன்பான பாராட்டு எனக்கு எனது சினிமா பயணத்தை மேலும் பலமாக்கியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com