\
ரஜினிகாந்த் ஜோடியாக மீண்டும் நயன்தாரா!

ரஜினிகாந்த் ஜோடியாக மீண்டும் நயன்தாரா!

ரஜினிகாந்த் ஜோடியாக மீண்டும் நயன்தாரா!
Published on

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாரா மீண்டும் நடிக்கிறார். 

ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படம் கடந்த பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இதையடுத்து அவர் ஏ.ஆர்.முருக தாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அரசியல் மற்றும் சமூக கருத்துக்களைக் கொண்ட படமாக உருவாகும் இதில் ஹீரோயினாக நடிக்க, முன் னணி நடிகைகள் சிலரிடம் பேசி வந்தனர். இந்தி நடிகைகளிடம் கால்ஷீட் கேட்டிருந்ததாகக் கூறப்பட்டது. 

இந்நிலையில், நடிகை நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இவர், ஏற்கனவே, ’சந்திரமுகி’ படத்தில் ரஜினியுடன் நடித்திருந்தார். ஷங்கரின் ’சிவாஜி’யில் ரஜினியுடன் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். ரஜினியின் ’குசேலன்’ படத்திலும் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இப்போது ரஜினியுடன் மீண்டும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

ரஜினியின் 166 (#Thalaivar166) வது படமாக இது உருவாகிறது. இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். ’பேட்ட’ படத்துக்குப் பிறகு அனிருத் இசை அமைக்கிறார். ஏப்ரல் 10 ஆம் தேதி மும்பையில் ஷூட்டிங் தொடங்குகிறது. தனது ’துப்பாக்கி’ படத்தின் ஷூட்டிங்கையும் மும்பையில்தான் ஏ.ஆர்.முருகதாஸ் தொடங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com