ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்pt

”Old Student-பத்தி பேசிட்டு; மீதியை சொல்ல மறந்துட்டன்” - அரங்கத்தை சிரிப்பலையில் ஆழ்த்திய ரஜினி!

‘கலைஞர் எனும் தாய்’ புத்தக வெளியீட்டில் பேசியதை நினைவுகூர்ந்த நடிகர் ரஜினிகாந்த், மீண்டும் அரங்கத்தை சிரிப்பலையில் ஆழ்த்தினார்.
Published on

கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் சென்னை கலைவாணர் அரங்கில், திமுக அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ புத்தக வெளியீட்டு விழா நடந்தது. நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், ரஜினிகாந்த், பத்திரிக்கையாளர் என்.ராம் உள்ளிட்ட பலபேர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

அப்போது மேடையில் பேசிய ரஜினி, ஸ்கூல் டீச்சருக்கு நியூ ஸ்டூடன்ட்ஸ் ப்ராப்ளமே கிடையாது. பழைய ஸ்டூடன்ட்ஸ்களைச் சமாளிப்பது தான் ரொம்ப கஷ்டம், சாதாரண விஷயம் அல்ல. இங்கும் ஏகப்பட்ட பழைய ஸ்டூடன்ட்ஸ்கள் இருக்கிறார்கள். ரேங்க் வாங்கிவிட்ட பிறகும் `கிளாஸை விட்டுப் போக மாட்டோம்’ என்று உட்கார்ந்துகொண்டிருக்கிறார்கள்’ என திமுக கட்சியின் மூத்தவர் துரைமுருகன் குறித்து கலகலப்பாக பேசியிருந்தார் ரஜினி.

பதிலுக்கு துரைமுருகனும் ரஜினியை கலாய்த்து பதில் சொல்ல, அப்போது அவர்கள் இருவர்தான் செய்தி தலைப்புகளாக இருந்தனர்.

இந்நிலையில் வேள்பாரி நூலின் 1 லட்சம் பிரதி வெளியீட்டை கொண்டாடும் நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, அப்போது பேசிய பழைய ஸ்டூடண்ட் பேச்சை மீண்டும் நினைவுகூர்ந்தார்.

மீதியை சொல்ல மறந்துட்டன்..

எம்பி சு.வெங்கடேசன் எழுதிய 'வேள்பாரி' நூல் 1 லட்சம் பிரதிகளை கடந்து விற்பனையாவதையொட்டி சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் சங்கர், தொகுப்பாளர் கோபிநாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு நூல்குறித்து பேசினர்.

அப்போது மேடையில் பேசிய ரஜினிகாந்த், “அறிவு சொல்லும் என்ன பேசணும்னு, உன்னுடைய திறமை சொல்லும் எப்படி பேசணும்னு, அரங்கம் சொல்லும் எத பேசணும்னு, உன்னுடைய அனுபவம் தான் சொல்லும் என்ன பேசணும், பேசக்கூடாதுனு. பல மாதங்களுக்கு முன்னால் இதே கலைவாணர் அரங்கில் எவ வேலு கலைஞர் பத்தி புத்தகம் ஒன்னு எழுதி வெளியிட்டு இருந்தாங்க. முதலமைச்சர், அமைச்சர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ்னு நிறைய பேர் அந்த நிகழ்ச்சியில் இருந்தாங்க.

எல்லாரும் நண்பர்கள் தானேனு, நான் பேசும் போது ‘பழைய ஸ்டூடன்ஸ்லாம் சமாளிக்குறது ரொம்ப கஷ்டம், கிளாஸ் விட்டு போகவே மாட்டாங்கனு சொல்லிட்டு மீதிய சொல்லி முடிக்கணும்னு மனசுல நினைச்சுட்டு இருந்தன். அதாவது ’பழைய ஸ்டூண்ட்ஸ்லாம் அனுபவ சாலிகள், தூண்கள், அவங்கதான் அடித்தளமே, அப்படியான பழைய ஸ்டூடண்ட்ஸ்கள் இல்லனா எந்த இயக்கமும், கட்சியும் வளர்ச்சி பெறாது. அவங்க தூண்கள் மட்டுமில்ல சிகரம் கூட’ அப்படினு சொல்ல நினைச்சன், ஆனா அதுக்குள்ள எல்லாரும் சிரிச்சதால சொல்ல வந்தத மறந்துட்டன். என்னடா இதுனு ஆகிபோச்சு” என ரஜினி கூற அப்போது அரங்கம் சிரிப்பலையில் மூழ்கியது.

தொடர்ந்து பேசிய ரஜினி, “அதனால இப்போ இந்த நிகழ்ச்சிக்கு வரும்போது ‘மிஸ்டர் ரஜினிகாந்த் பார்த்து பேசுங்க, எல்லாரும் உங்க ரசிகர்கள் கிடையாது’ என உள்ளுகுள்ள சொல்லிகிட்டு வந்தன். சிலபேர் பார்க்குறாங்க, இப்படியான நிகழ்ச்சிக்கு யாராவது ஹீரோவ கூப்டணும்னா சிவகுமார கூப்டு இருக்கலாம், என்னமா பேசுறாரு, எவ்வளவு படிச்சிருக்காரு, மகாபாரதம், குறள் குறித்து 6 மணிநேரம் தொடர்ச்சியா பேசுறாரு. அவரு இல்லையா கமல்ஹாசன், பெரிய அறிவாளி அவரை கூப்பிட்டு இருக்கலாம். அதைவிட்டுட்டு 75 வயசாகியும் கூலிங் கிளாஸ்ஸ போட்டுகிட்டு ஸ்லோ மோஷன்லயே நடந்து வர இந்தாள போய் கூப்டு இருக்காங்கனு பலபேர் நினைப்பாங்க” என கலகலப்பாக பேசினார்.

மேலும், ஜெயகாந்தன் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர், 'யாருக்காக அழுதான்' என்ற புத்தகத்தைப் படித்துவிட்டு 3 நிமிடங்கள் அழுதேன் என்று கூறிய ரஜினி, தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியதில் முக்கியப் பங்காற்றிய 3 இயக்குநர்களில் பாரதிராஜா, மணிரத்னத்தை கடந்து இன்னொருவர் சங்கர். அவரின் வேள்பாரி தழுவிய திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com