ரசிகர் மன்ற நிர்வாகிகளை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேச இருப்பதாக வரும் தகவல் உண்மையல்ல என்று அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அவரது ரசிகர்கள் மன்ற நிர்வாகிகளை ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் சந்திக்க இருப்பதாகவும் அங்கு அவர்களிடம் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின. அந்தக் கூட்டத்தில் ரஜினிகாந்த் முக்கிய முடிவு எடுக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், ரஜினியின் செய்தி தொடர்பாளர் ரியாஸ் அந்தச் செய்தியை மறுத்துள்ளார். ‘ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாக வரும் தகவலில் உண்மையல்ல’ என்று அவர் கூறியுள்ளார்.