\
78 வயது ரசிகைக்கு ரஜினி அங்கீகாரம்!

78 வயது ரசிகைக்கு ரஜினி அங்கீகாரம்!

78 வயது ரசிகைக்கு ரஜினி அங்கீகாரம்!
Published on: 

78 வயதிலும் தனது மன்றத்துக்கு உறுப்பினர்களைச் சேர்க்கும் ரசிகை ஒருவரை வீட்டுக்கு அழைத்து பாராட்டுத் தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

திருவொற்றியூரைச் சேர்ந்தவர்  சாந்தா. வயது 78. தீவிர ரஜினி ரசிகையான இவர், ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை அறிவித்ததுமே மகிழ்ச்சியுடன் களமிறங்கினார். ரஜினி மக்கள் மன்ற கிளை உறுப்பினர் சேர்க்கைப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் சாந்தாவின் ஒரே விருப்பம், ரஜினியைச் சந்தித்து தனது பணிகளைச் சொல்ல வேண்டும் என்பதுதான். 

இதுகுறித்த தகவலை ரஜினி மக்கள் மன்றத்தினர் இன்று ரஜினியிடம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சாந்தாவை, தன் இல்லத்துக்கு வரவழைத்த ரஜினிகாந்த் அவருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டினார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com