நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளான இன்று அவருடன் பழகிய திரைப் பிரபலங்கள் சமூக வலைதளமான ட்விட்டர் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.
ரஜினிகாந்திற்கு இன்று 67 வது பிறந்தநாள். அவருடன் பழகியவர்கள் அழகழகான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். சிறு வயதில் நடிகர் ஜீவா எடுத்த புகைப்படம், நடிகர் விஜய் தனது இளம் வயதில் எடுத்த புகைப்படம், நடிகை சுமலதா தனது கணவருடன் எடுத்து கொண்ட புகைப்படம், ராகவாலாரன்ஸ் இளைஞராக இருந்த போது எடுத்த புகைப்படம், அமிதாப் பச்சன், ஷாரூக்கான், அஜித், தனுஷ், அனிருத் என பல திரை நட்சத்திரங்களின் புகைப்படகளை ஒரு ஆல்பமாக தொகுத்து அளித்திருக்கிறோம்.