முத்துவேல் பாண்டியன் பராக் பராக்! ‘ஜெயிலர்’ ப்ரமோவில் பட்டாக் கத்தியுடன் மிரட்டும் ரஜினி!

முத்துவேல் பாண்டியன் பராக் பராக்! ‘ஜெயிலர்’ ப்ரமோவில் பட்டாக் கத்தியுடன் மிரட்டும் ரஜினி!
முத்துவேல் பாண்டியன் பராக் பராக்! ‘ஜெயிலர்’ ப்ரமோவில் பட்டாக் கத்தியுடன் மிரட்டும் ரஜினி!

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது கதாபாத்திரத்தை அறிமுகம் செய்வதுப் போன்ற சிறப்பு ப்ரோமோ ஒன்றை இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரஜினிகாந்தின் 169-வது படமாக உருவாகி வருகிறது ‘ஜெயிலர்’ திரைப்படம். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, நெல்சன் திலீப்குமார் தனது 4-வது படமாக இயக்கி வருகிறார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

அடுத்தாண்டு வெளியாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், ரஜினிகாந்தின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, ‘ஜெயிலர்’ படத்தில் அவர் நடித்துவரும் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தின் அறிமுக வீடியோ அடங்கிய சிறப்பு ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

அந்த ப்ரோமோவில் நடுத்தர வயது ரஜினி போன்றும், இயற்கை சூழ்ந்த ஒரு வீட்டில், மேசையின் அடியில் ஏராளமான கத்திகள் உள்ள நிலையில், அதிலிருந்து ஒரு கத்தியை உருவுவதுப் போன்றும் அமைந்துள்ளது. இதனால் தரமான ஆக்ஷன் காட்சிகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளதால், அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com