’அண்ணாத்த’ டப்பிங் பணிகளை தொடங்கிய ’சிறுத்தை’ சிவா

’அண்ணாத்த’ டப்பிங் பணிகளை தொடங்கிய ’சிறுத்தை’ சிவா

’அண்ணாத்த’ டப்பிங் பணிகளை தொடங்கிய ’சிறுத்தை’ சிவா
Published on

’அண்ணாத்த’ படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளது படக்குழு.

'தர்பார்' படத்திற்கு பிறகு நடிகர் ரஜினி ’சிறுத்தை’ சிவா இயக்கத்தில் 'அண்ணாத்த' படத்தில் நடித்து முடித்துள்ளார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் படத்தில் நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 4-ஆம் தேதி படம் வெளியாகிறது.

சென்னையில் படமாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு, பின் ஹைதராபாத், மேற்குவங்கம் உள்ளிட்ட இடங்களிலும் நடைபெற்றது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதால் டப்பிங் பணிகளை துவக்கியுள்ளது படக்குழு. நடிகை மீனா ’அண்ணாத்த’ படத்திற்கு டப்பிங் பேசும் புகைப்படங்கள் வெளியான நிலையில், தற்போது நடிகர் சதீஷும் டப்பிங் பேச கலந்துகொண்டபோது இயக்குநர் ‘சிறுத்தை’ சிவாவுடன் இருக்கும் புகைப்படங்களை உற்சாகமுடன் வெளியிட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com