நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா’ படத்திற்கான எமோஜி டிவிட்டரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ‘காலா’. நடிகர் தனுஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கிறார். ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு பிறகு இப்படம் வெளியாவதால் ‘காலா’படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருகிறது. இந்த நிலையில்‘காலா’படத்திற்கான எமோஜி டிவிட்டரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஹாஷ் டேக்குடன் இனி ‘காலா’ என தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என எந்த மொழியில் டைப் செய்தாலும், கருப்பு, சிவப்பில் ரஜினி கர்ஜிக்கும் வகையிலான எமோஜி புகைப்படம் இடம்பெறும்.
ஜூன் 7-ம் தேதி ‘காலா’ உலகம் முழுக்க வெளியாகவுள்ள நிலையில், படத்தின் விளம்பர பணிகளை படக்குழுவினர் தொடங்கியுள்ளனர். அந்த வகையிலேயே காலாவின் ட்விட்டர் எமோஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ‘மெர்சல்’ திரைப்படத்திற்கு ட்விட்டர் எமோஜி பயன்படுத்தப்பட்டது.