சினிமா
‘நான் ஆட்டோக்காரன்..ஆட்டோக்காரன்’ ரஜினியை போன்றே அவரது பேரன்!
‘நான் ஆட்டோக்காரன்..ஆட்டோக்காரன்’ ரஜினியை போன்றே அவரது பேரன்!
ரஜினியை போன்றே அவரது பேரனும் உள்ளதாக, அவரது மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யாவுக்கும், தொழிலதிபர் அஷ்வினுக்கும் கடந்த 2010ல் திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதியருக்கு வேத் என்கிற மகன் உண்டு. இதற்கிடையே செளந்தர்யா-அஷ்வின் ஆகிய இருவரின் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் காரணமாக விவாகரத்து பெற்றுவிட்டனர். அவர்களின் மகன் வேத் செளந்தர்யாவுடன் வளர்ந்து வருகிறார்.
இந்நிலையில் வேத் பொம்மைகளுடன் விளையாடும் புகைப்படம் ஒன்றை செளந்தர்யா டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் சில ஆட்டோக்களை வரிசையாக நிற்க வைத்து அவர் விளையாடுகிறார். இந்த படத்தை வெளியிட்டுள்ள செளந்தர்யா, ‘நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்’ என வேத், அவரது தாத்தாவைப் போல் இருப்பதாக கூறியுள்ளார்.