பிறந்தநாள் வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய ரஜினி

பிறந்தநாள் வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய ரஜினி
பிறந்தநாள் வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய ரஜினி

தனக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறிய அரசியல் தலைவர்கள், சினிமா நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது 67வது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். இதையொட்டி பல்வேறு பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ரஜினி ட்விட்களை பதிவிட்டுள்ளார். அதன்படி மேற்க வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.

அத்துடன் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், மோகன்லால், மகேஷ் பாபு, மோகன் பாபு, கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் தனக்காக போஸ்டர்கள் ஒட்டியும், செய்தித்தாள்கள் மற்றும் சமூக வளைத்தளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com