கர்ப்பிணிக்கு வளைகாப்பு வளையல் அணிவித்த ரஜினி

கர்ப்பிணிக்கு வளைகாப்பு வளையல் அணிவித்த ரஜினி

கர்ப்பிணிக்கு வளைகாப்பு வளையல் அணிவித்த ரஜினி
Published on

கர்ப்பிணி ரசிகையின் ஆசையை நிறைவேற்றும் வகையில், அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் வளைகாப்பு வளையல் அணிவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ராகவா விக்னேஷூம் ‌அவரது மனைவி ஜெகதீஸ்வரியும் நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள். தர்பார் படத்தின் சூட்டிங் கடைசி நாளில் ராகவா விக்னேஷ் தனது கர்ப்பிணி மனைவியுடன் ரஜினியை சந்தித்தார். அப்போது தந்தை ஸ்தானத்தில் இருந்து தனக்கு வளைகாப்பு வளையல் அணிவிக்கும்படி ஜெகதீஸ்வரி கேட்டிருக்கிறார். 

உடனே ரஜினிகாந்த் வளைகாப்பு வளையல் வாங்கி கர்ப்பிணி ஜெகதீஸ்வரிக்கு அணிவித்திருக்கிறார். இந்த சம்பவம் அங்கிருந்த ரசிகர்கள் மற்றும் படக்குழுவினரை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com