\
ராகவேந்திரா கோவிலில் ரஜினி வழிபாடு

ராகவேந்திரா கோவிலில் ரஜினி வழிபாடு

ராகவேந்திரா கோவிலில் ரஜினி வழிபாடு
Published on: 

ஆந்திராவில் உள்ள மந்த்ராலயம் ராகவேந்திரா கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் இன்று வழிபாடு செய்தார்.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ள மந்திராலயம் ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனக் கோயிலுக்கு இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் திடீரென வருகை தந்தார். அவர் சாமியை வழிபாடு செய்ய வந்துள்ளார் என்பது அப்போது தெரியவந்தது. இதையடுத்த அவருக்கு உரிய வரவேற்பு மரியாதைகள் செய்யப்பட்டன.

பின்னர் அங்குள்ள துங்கபத்ரா நதியில் ரஜினி நீராடினார். அத்துடன் கிராம தேவதையான மஞ்சாலம்மா கோயிலுக்கும் சென்று வழிபட்டார். இதைத்தொடர்ந்து கோயில் மடாதிபதி சுபுதீந்திராவை சந்தித்த ரஜினி, அவரிடம் ஆசிபெற்றார். ரஜினியின் திடீர் வருகையால் அந்தக் கோயிலில் பரபரப்பு ஏற்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com