\
இமயமலைக்கு ரஜினி நாளை ரிலாக்ஸ் பயணம்

இமயமலைக்கு ரஜினி நாளை ரிலாக்ஸ் பயணம்

இமயமலைக்கு ரஜினி நாளை ரிலாக்ஸ் பயணம்
Published on

இடைவிடாத சினிமா மற்றும் அரசியல் பணிகளுக்கு இடையே நடிகர் ரஜினிகாந்த் நாளை ஒரு ரிலாக்ஸ் பயணமாக இமயமலை புறப்படுகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ரசிகர்கள் மத்தியில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக ரஜினி அறிவித்தார். இதனையடுத்து தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி, மாவட்ட வாரியாக அதற்கு நிர்வாகிகள் நியமித்து வருகிறார். இதற்கிடையே பொது வெளியில் அவ்வப்போது தனது அரசியல் கருத்துகளை தெரிவித்து வருகிறார் ரஜினி.
இதற்கிடையில், ரஜினிகாந்த் நடித்துள்ள `காலா’ திரைப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. இதையடுத்து  இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 2.0 படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. அதுமட்டுமல்லாமல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் ரஜினி நடிக்க இருக்கிறார். திரைப்பணிகளிலும் தொடர்ந்து ரஜினி கவனத்தை செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், ஆன்மிக பயணமாக ரஜினிகாந்த் நாளை இமயமலை புறப்படுகிறார். சென்னையில் இருந்து விமானத்தின் மூலம் இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவுக்கு செல்லும் அவர், அங்கிருந்து தர்மசாலா, ரிஷிகேஷ் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல இருக்கிறார். அங்குள்ள அவருடைய ஆன்மிக வழிகாட்டிகள், குருமார்களை ரஜினி சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com