அண்ணாத்த படப்பிடிப்பில் மீண்டும் இறங்கும் ரஜினி?

அண்ணாத்த படப்பிடிப்பில் மீண்டும் இறங்கும் ரஜினி?

அண்ணாத்த படப்பிடிப்பில் மீண்டும் இறங்கும் ரஜினி?

கொரோனா காரணமாக தடைப்பட்ட அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினி நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘அண்ணாத்த’. இந்தப்படத்தில் கதாநாயகியாகியாக நயன்தாரா நடிக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் தொடங்கியது. இதனிடையே படப்பிடிப்பில் பணியாற்றிய சிலருக்கு கொரோனாத்தொற்று ஏற்பட்ட நிலையில் படப்பிடிப்பு தடைப்பட்டது.

அதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிக்கு இரத்த அழுத்தம் அதிகரித்தது. அரசியல் பணிகளில் தீவிரமாக பணியாற்றி வந்த ரஜினி மருத்துவர்களின் அறிவுரைப்படி அரசியல் கட்சித் தொடங்கப்போவதில்லை என அறிவித்தார்.

இந்நிலையில் ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு பிப்., இறுதி அல்லது மார்ச் மாத ஆரம்பத்தில் மீண்டும் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிப் 17-ஆம் தேதி அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினியை கலந்துகொள்ள படக்குழு கேட்டுக்கொண்டாதாகவும், அதற்கு மறுத்து தெரிவித்த ரஜினி மார்ச் இறுதியில் படப்பிடிப்பில் கலந்துகொள்வதாக கூறியதாகவும் கூறப்படுகிறது. ஹைதராபாத்தில் சுமார் ஒரு மாதம் நடைபெறும் அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினி கலந்துகொள்வார் எனச் சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com