\
தாமதமாகிறதா 2.ஓ ரிலீஸ்?

தாமதமாகிறதா 2.ஓ ரிலீஸ்?

தாமதமாகிறதா 2.ஓ ரிலீஸ்?
Published on: 

ரஜினியின் 2.ஓ திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

லைக்கா நிறுவனம் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரித்து வரும் திரைப்படம் 2.ஓ. இந்தப் படம் ஏற்கெனவே வெளியான ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகம் என்று முதலில் செய்திகள் வந்தன. ஆனால் சமீபத்தில் துபாயில் நடந்த இசை வெளியீட்டில் இயக்குநர் ஷங்கர், “இந்தப் படம் ஏற்கெனவே வெளிவந்த எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் இல்லை. அதன் தொடர்ச்சியாக இப்படத்தை யாரும் எதிர்பார்க்க வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டார்.

2.ஓ திரைப்படம் தொடங்கப்பட்ட தேதியில் இருந்தே மிக பொறுமையாக ஒவ்வொரு கட்டமாக முன்னேறி வந்த ஷங்கர் சில வாரங்களுக்கு முன்பு அதிரடியாக அதன் இசை வெளியீடு மற்றும் டீசர் அடுத்து ட்ரெய்லர் தேதிகளை முறையாக அறிவித்தார். அதன்படி ஜனவரி 25 அன்று திரைப்படம் உலகம் முழுக்க வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட தேதியில் இசை வெளியீடு நடத்தப்பட்ட நிலையில் பட வெளியீட்டில் எந்த மாற்றமும் வராது என ரஜினி ரசிகர்கள் நம்பினர். ஆனால் அதில் சில மாற்றங்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது. படக்குழுத் தரப்பில் டீசர் நவம்பர் 27 அன்றும் ட்ரெய்லர் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12 அன்றும் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் படத்தின் விஎஃப்எக்ஸ் பணிகள் திட்டமிட்டபடி முடிக்கப்படாததால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் மாற்றம் செய்யப்படாலம் என்றும் ஜனவரி 25 அன்று திரைப்படம் வெளிவராது என்றும் செய்திகள் வலம் வருகின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com