ரஜினி சார் உங்களுடைய முடிவு அனைத்து தமிழர்களின் இதயங்களையும் உடைத்துவிட்டது - குஷ்பு

ரஜினி சார் உங்களுடைய முடிவு அனைத்து தமிழர்களின் இதயங்களையும் உடைத்துவிட்டது - குஷ்பு

ரஜினி சார் உங்களுடைய முடிவு அனைத்து தமிழர்களின் இதயங்களையும் உடைத்துவிட்டது - குஷ்பு
Published on

"ரஜினி சார் உங்களுடைய முடிவு அனைத்து தமிழர்களின் இதயங்களையும் உடைத்துவிட்டது"  என்று நடிகையும் பாஜகவின் தமிழக தலைவர்களில் ஒருவருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

’ஜனவரியில் கட்சி தொடக்கம்; டிசம்பர் 31 ல் தேதி அறிவிப்பு’ என்று ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டை கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அறிவித்தபோது “அன்புள்ள ரஜினி சார், ஒரு வழியாக நீங்கள் அரசியலில் இறங்குகிறீர்கள் என்பதை அறிந்ததில் மகிழ்ச்சி. உங்கள் புதிய பாத்திரத்துக்கு வாழ்த்துகள். உங்கள் முழு முயற்சியை இதில் காட்டுவீர்கள் என்று எனக்கு உறுதியாகத் தெரியும்” என்று உற்சாகமுடன் வாழ்த்து தெரிவித்தார் குஷ்பு.

தற்போது, ரஜினியின் கட்சி தொடங்கவில்லை முடிவுக்கும் “உங்களுடைய ஆரோக்கியம் மற்றும் உடல்நலத்திற்கு முன்பு வேறெதுவும் பெரிதல்ல” என்று உருக்கமுடன் குஷ்பு பதிவிட்டுள்ளார்.

தனது உடல்நிலையை காரணம் காட்டி தற்போது ’கட்சி தொடங்கவில்லை. அரசியலுக்கு வரமுடியவில்லை. என்னை மன்னியுங்கள்’ என்று தெரிவித்துள்ளார். அவரின் இந்த முடிவுக்கு அரசியல்வாதிகளும் சினிமா பிரபலங்கள் என பல தரப்பினரும் கருத்து தெரிவித்துவரும் நிலையில், நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில்,

     “அன்புள்ள ரஜினிகாந்த் சார், உங்களுடைய முடிவு அனைத்து தமிழர்களின் இதயங்களையும் உடைத்துவிட்டது. ஆனால் உங்களுடைய ஆரோக்யம் மற்றும் உடல்நலத்திற்கு முன்பு வேறெதுவும் பெரிதல்ல என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. உங்களுடைய நலம்விரும்பியாக, ஒரு தோழியாக உங்களுடைய முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். நீங்கள் எனக்கு விலைமதிப்பற்ற, மிக முக்கியமான ஒருவர். நன்றாக மகிழ்ச்சியாக இருங்கள்” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com