\
"டோன்ட் ஃபீல் தலைவா!" - கார்த்திக் சுப்பராஜ்

"டோன்ட் ஃபீல் தலைவா!" - கார்த்திக் சுப்பராஜ்

"டோன்ட் ஃபீல் தலைவா!" - கார்த்திக் சுப்பராஜ்
Published on

ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என்று கூறியபோது “தலைவா வா தலைவா” என்று வரவேற்ற கார்த்திக் சுப்பராஜ், தற்போது கட்சி தொடங்கவில்லை என்று ரஜினியின் முடிவுக்கு “தலைவா டோன்ட் ஃபீல்” என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.

வரும் டிசம்பர் 31-ஆம் தேதி கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்றுக்கூறிய ரஜினி உடல்நிலையை காரணம் காட்டி தற்போது ’கட்சி தொடங்கவில்லை. அரசியலுக்கு வரமுடியவில்லை. என்னை மன்னியுங்கள்’ என்று தெரிவித்துள்ளார். அவரின் இந்த முடிவுக்கு அரசியல்வாதிகளும் சினிமா பிரபலங்கள் என பல தரப்பினரும் கருத்து தெரிவித்துவரும் நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில்,


    “தலைவா ... Pls மோசமாக உணர வேண்டாம். உங்களைப் போன்ற ஒரு நல்ல அரசியல் தலைவருக்கு நாங்கள் தகுதியற்றவர்களாக இருக்கலாம். நீங்கள் எங்களுக்கு முக்கியம் தலைவா . உங்கள் உடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள். நாங்கள் எப்போதும் உங்களை நேசிப்போம்” என்று பதிவிட்டு கையெடுத்து கும்பிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com