\
"நிச்சயம் உங்கள் கனவு நிறைவேறும்!"- ரஜினிக்கு ராகவா லாரன்ஸ் வாழ்த்து

"நிச்சயம் உங்கள் கனவு நிறைவேறும்!"- ரஜினிக்கு ராகவா லாரன்ஸ் வாழ்த்து

"நிச்சயம் உங்கள் கனவு நிறைவேறும்!"- ரஜினிக்கு ராகவா லாரன்ஸ் வாழ்த்து
Published on: 

உடல்நிலையை பொருட்படுத்தாமல் மக்கள் சேவையாற்ற வந்துள்ள ரஜினியின் கனவு நிறைவேறும் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.

ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருபவரான நடிகர் ரகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “மிக்க நன்றி தலைவா. கட்சி ஆரம்பிக்கும் இந்த செய்தியைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் கட்சி ஆரம்பிக்கவேண்டும் என்று காத்திருக்கும் லட்சக்கணக்கான ரசிகரில் நானும் ஒருவன்.

உங்கள் லட்சியம் நிறைவேற நான் ராகவேந்திரா சாமியிடம் வேண்டிக்கொள்கிறேன். கொரோனா சூழலில் உங்கள் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் மக்களுக்கு சேவையாற்ற வந்துள்ளீர்கள். நிச்சயம் உங்கள் கனவு நிறைவேறும்" என்று கூறியுள்ளார்.

முன்னதாக, ஜனவரியில் கட்சி தொடங்குவதாக நடிகர் ரஜினிகாந்த் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com