சிகிச்சை, ஓய்வுக்காக தனி விமானம் மூலம் அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்?

சிகிச்சை, ஓய்வுக்காக தனி விமானம் மூலம் அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்?
சிகிச்சை, ஓய்வுக்காக தனி விமானம் மூலம் அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்?

2 சிறுநீரகங்களையும் மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ள ரஜினி உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்துக்கு 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட சிறுநீரக பாதிப்பு காரணமாக சிங்கப்பூருக்கு சென்று சிகிச்சைபெற்றார். அதன்பிறகு 2016ஆம் ஆண்டு மே மாதம் மீண்டும் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு அமெரிக்காவுக்கு சென்று சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சையை மேற்கொண்டார்.

அதன்பிறகு, கடந்த ஆண்டு இறுதியில், ’அண்ணாத்த’ படபிடிப்பின்போது அவருக்கு மீண்டும் கொரோனா தொற்று அறிகுறிகள் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற அவர், உடல்நிலையில் கவனம் செலுத்தவேண்டும் எனக் கூறி தனது அரசியல் பிரவேசத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில், தற்போது ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், உடல் பரிசோதனைக்காக ரஜினி அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனி விமானம் மூலம் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ள ரஜினி மத்திய அரசின் அனுமதியை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓரிரு நாளில் அனுமதி கிடைத்தவுடன் அமெரிக்கா செல்லும் ரஜினி அங்கு 15 நாட்கள் தங்கியிருப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.சென்னை திரும்பியதும் சிலநாள் ஓய்வு எடுத்தபின் ரஜினி ‘அண்ணாத்த’ இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பங்கேற்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com