\
புகழையோ பணத்தையோ தேடி போகாதவர் பாலகுமாரன்- ரஜினிகாந்த் அஞ்சலி

புகழையோ பணத்தையோ தேடி போகாதவர் பாலகுமாரன்- ரஜினிகாந்த் அஞ்சலி

புகழையோ பணத்தையோ தேடி போகாதவர் பாலகுமாரன்- ரஜினிகாந்த் அஞ்சலி
Published on

மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார் 

பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் சென்னை மயிலாப்பூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார் பாலகுமாரன். இதையடுத்து அவர் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு நாளை நடைபெறும் என தெரிகிறது. இந்நிலையில் மயிலாப்பூரில் வைக்கப்பட்டுள்ள பாலகுமாரன் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  "பாலகுமாரன் என் நெருங்கிய நண்பர், அவர் மிக பெரிய எழுத்தாளர். பாட்ஷா பட வெற்றிக்கு பிறகு அவரை பல படங்களில் வசனம் எழுத அழைத்தும், அவர் அதற்கு சம்மதிக்கவில்லை. எனது மற்ற படத்திற்கு வசனம் எழுதவைக்க முயற்சித்தப்போது அவர் ஆன்மிகமும், இலக்கியமும் தான் முக்கியம் என தவிர்த்து விட்டார். அவர் புகழையோ பணத்தையோ தேடி போகவில்லை என ரஜினி தெரிவித்தார். 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com