‘காலா’ டப்பிங் பணிகளில் ரஜினி..!

‘காலா’ டப்பிங் பணிகளில் ரஜினி..!
‘காலா’ டப்பிங் பணிகளில் ரஜினி..!

பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காலா' படத்தின் டப்பிங் பணிகளில் கலந்துகொண்ட ரஜினி இன்று டப்பிங் பேசினார்.

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் இரண்டாவது முறையாக நடித்துள்ள படம் ‘காலா’. தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். நானா படேகர், சமுத்திரக்கனி, அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலா படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. காலா படத்தின் டப்பிங் பணிகள் கடந்த மாதம் தொடங்கியது. இந்நிலையில் சென்னை மைலாப்பூரில் உள்ள நாக் ஸ்டூடியோவில் நடைபெற்று வரும் டப்பிங் பணியில் கலந்துகொண்டு ரஜினி இன்று டப்பிங் பேசினார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் ரஜினி ரசிகரால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com