ஹாலிவுட்டை அசத்த ஹாட் ஏர் பலூன்.. 2.0 விளம்பரம்!
ரஜினிகாந்த், அக்ஷய்குமார் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கியுள்ள 2.0 படத்தின் ப்ரமோசன்கள் பட்டையைக் கிளப்பி வருகிறது. உலகின் கவனத்தை ஈர்க்க பிரம்மாண்ட விளம்பர யுக்தியை கையாண்டு வருகிறது படக்குழு.
இதற்காக லைகா நிறுவனம், ரஜினி, அக்ஷய் குமாரின் மெகா சைஸ் புகைப்படம் ஹாட் ஏர் பலூனை நூறடி உயரத்தில் பறக்க விட திட்டமிட்டுள்ளனர். முதன் முறையாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வரும் செவ்வாய்க்கிழமை முதல் இந்த பலூன்கள் பறக்கவிடப்படுகிறது. இதுவரை எந்த ஒரு இந்திய திரைப்படமும் இப்படி ஒரு விளம்பரத்தை ஹாலிவுட்டில் செய்ததில்லை. ஹாலிவுட்டின் கவனத்தை ஈர்க்க இந்த விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.
இத ஹாட் ஏர் பலூன் விளம்பரம் லாஸ் ஏஞ்சல்ஸை அடுத்து, லண்டன், துபாய், சான் பிரான்சிஸ்கோ, தெற்கு, கிழக்கு ஆசிய நாடுகள், ஐரோப்பா, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளில் பறக்க விடத் திட்டமிட்டு உள்ளனர்.
400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் 15 மொழிகளில் வரும் ஜனவரி 25ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. உலகம் முழுவது 2.0 படத்தை வெளியிட்டு ஹாலிவுட் திரைப்படங்களுக்கு சவால்விட உள்ளதாக கூறப்படுகிறது.