\
‘அண்ணாத்த’ இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக ஜூலை 14ல் மே.வங்கம் செல்கிறார் ரஜினி

‘அண்ணாத்த’ இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக ஜூலை 14ல் மே.வங்கம் செல்கிறார் ரஜினி

‘அண்ணாத்த’ இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக ஜூலை 14ல் மே.வங்கம் செல்கிறார் ரஜினி
Published on

அண்ணாத்த  திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் ஜூலை 14ஆம் தேதி மேற்குவங்கம் செல்கிறார்.

'சிறுத்தை' சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் அண்ணாதுரை திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இதற்கான வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வரும் 15ஆம் தேதி முதல் மேற்குவங்கத்தில் இறுதி கட்ட படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருக்கின்றனர்.

இதற்காக நடிகர் ரஜினிகாந்த் 14ஆம் தேதி அங்கு செல்கிறார். இந்த படப்பிடிப்பில் அவரின் காட்சிகள் நான்கு நாட்கள் படமாக்கப்படுகின்றன. அத்துடன் அண்ணாத்த படத்தில் இடம்பெறும் ரஜினிகாந்த் காட்சிகள் அனைத்தும் முடிந்துவிடும் என கூறப்படுகிறது.

இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com