\
‘தர்பார்’வெற்றியடைய மண் சோறு சாப்பிட்ட ரஜினி ரசிகர்கள்..!

‘தர்பார்’வெற்றியடைய மண் சோறு சாப்பிட்ட ரஜினி ரசிகர்கள்..!

‘தர்பார்’வெற்றியடைய மண் சோறு சாப்பிட்ட ரஜினி ரசிகர்கள்..!
Published on

‘தர்பார்’ படம் வெற்றி அடைய வேண்டி அலகு குத்தியும், மண் சோறு சாப்பிட்டும் ரஜினி ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர்.


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்தின் 167-வது படமாக ‘தர்பார்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. படம் இந்தியா முழுவதும் 4000 திரையரங்குகளிலும், உலகம் முழுவதும் 7000 திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள ரஜினி ரசிகர் மன்றம் சார்பாக, ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முன்பு தர்பார் படம் வெற்றி அடைய வேண்டி அலகு குத்தியும் மண் சோறு சாப்பிட்டும் ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com