டாக்டர் அறிவுரை, படப்பிடிப்பு, ரத்த அழுத்தம்: ஹைதராபாத்தில் என்ன நடந்தது? - ரஜினி விளக்கம்

டாக்டர் அறிவுரை, படப்பிடிப்பு, ரத்த அழுத்தம்: ஹைதராபாத்தில் என்ன நடந்தது? - ரஜினி விளக்கம்

டாக்டர் அறிவுரை, படப்பிடிப்பு, ரத்த அழுத்தம்: ஹைதராபாத்தில் என்ன நடந்தது? - ரஜினி விளக்கம்
Published on

ஹைதராபாத்தில் நடந்தது குறித்து ரஜினிகாந்த் விளக்கமாக தெரிவித்துள்ளார்.

வரும் 31-ஆம் தேதி கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்றுக்கூறிய ரஜினி தற்போது ‘கட்சி ஆரம்பிக்கவில்லை’ என்று அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

இதுதொடர்பாக இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பில், "கட்சி தொடங்கி அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். என்னை நம்பி வருபவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை. என்று தெரிவித்தார். குறிப்பாக ஹைதராபாத்தில் நடந்தது குறித்து விளக்கமாக தெரிவித்துள்ளார்.

அதில்,''மருத்துவர்களின் அறிவுரையும் மீறி அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஹைதராபாத் சென்றேன். கிட்டத்தட்ட 120 பேர் கொண்ட படக்குழுவினருக்கு தினமும் கொரோனா பரிசோதனை செய்து ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்தி முகக்கவசம் அணிவித்து மிகவும் ஜாக்கிரதையாக படப்பிடிப்பை நடத்தி வந்தோம். ஆனாலும் 4 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது.

உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்வித்தனர். எனக்கு கொரோனா நெகட்டிவ் வந்தது. ஆனால் ரத்த கொதிப்பில் ஏற்றத்தாழ்வு இருந்தது. அப்படி இருந்தால் என்னுடைய மாற்று சிறுநீரகத்தை கடுமையாக பாதிக்கும். ஆகையால் 3 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருக்க நேரிட்டது. படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. பல கோடி ரூபாய் நஷ்டம். இவை அனைத்துக்கும் காரணம் என்னுடைய உடல்நிலை. இதை ஆண்டவன் எனக்கு கொடுத்த ஒரு எச்சரிக்கையாத்தான் பார்க்கிறேன்'' என தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com