\
நேரில் வாழ்த்திய ரஜினி, கமல்; களைகட்டிய தயாரிப்பாளர் அன்புசெழியன் இல்ல திருமண விழா!

நேரில் வாழ்த்திய ரஜினி, கமல்; களைகட்டிய தயாரிப்பாளர் அன்புசெழியன் இல்ல திருமண விழா!

நேரில் வாழ்த்திய ரஜினி, கமல்; களைகட்டிய தயாரிப்பாளர் அன்புசெழியன் இல்ல திருமண விழா!
Published on

தயாரிப்பாளர் அன்புசெழியன் இல்ல திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், போனி கபூர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான அன்பு செழியனின் மகள் சுஷ்மிதாவுக்கும் சன் ஐ.ஏ.எஸ் அகடாமியின் இயக்குநர் சரணுக்கும் இன்று காலை திருமணம் நடைபெற்றது. அதில், தமிழ் சினிமா பிரபலங்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தயாரிப்பாளர் போனிகபூர், பிரபு, விக்ரம் பிரபு, விஜய் ஆண்டனி, வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் தாணு, தேனாண்டாள் முரளி, அருள்பதி, எல்ரெட்குமார், நடிகர் நாசர், அம்மா சிவா, மனோபாலா, மயில்சாமி, இயக்குநர்கள் என்.லிங்குசாமி, சுசிகணேசன், சரண், நடிகர் வைபவ், சுப்பு பஞ்சு, ரோகிணி தியேட்டர் பன்னீர் செல்வம் ஆகிய பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

மேலும், அரசியல் பிரமுகர்கள் தங்கம் தென்னரசு, சேகர் பாபு, டிடிவி. தினகரன், எஸ்.வி சேகர், ராணிபெட் காந்தி, கு. பிச்சாண்டி, வி.வி ராஜன் செல்லப்பா, ஆர்.பி உதயகுமார், வானதி சீனிவாசன், செல்லூர் ராஜு, எஸ்.பி வேலுமணி, ஜெயக்குமார், எல்.கே சுதீஷ், ஆகியோர் நேரில் ஆசிர்வதித்து வாழ்த்து தெரிவித்தனர். இன்று மாலை வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதிலும், திரை பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com