கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் லண்டனில் நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கமல்ஹாசனுக்கு உறுதுணையாகவும் அவர் வளர்ச்சிக்கு காரணமாகவும் இருந்தவர் சந்திரஹாசன். அவர் மறைவு பற்றி கமல்ஹாசன், ‘நண்பனாய் நல்லாசானாய், தமயனும், தகப்பனுமாய் அவரை பெற்றதால் உற்றது நல் வாழ்வு. எனக்காக அவர் கண்ட கனவுகளில் பாதியைக் கூட நான் நிறைவேற்றவில்லை’ என்று டிவிட்டர் பக்கத்தில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் சந்திரஹாசன் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த், இரங்கல் தெரிவித்துள்ளார். ’சந்திரஹாசனின் மறைவால் வாடும் எனது நண்பர் கமல்ஹாசனுக்கும் அவரது குடும்பத்துக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று அவர் ஆறுதல் கூறியுள்ளார்.