பாட்ஷா படம்; ஆட்டோ ஓட்டுநர் உடை - ஜப்பானில் களைகட்டிய ரஜினி பிறந்தநாள்!

பாட்ஷா படம்; ஆட்டோ ஓட்டுநர் உடை - ஜப்பானில் களைகட்டிய ரஜினி பிறந்தநாள்!

பாட்ஷா படம்; ஆட்டோ ஓட்டுநர் உடை - ஜப்பானில் களைகட்டிய ரஜினி பிறந்தநாள்!
Published on

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை ஜப்பானில் உள்ள அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று புகழப்படும் நடிகர் ரஜினிகாந்த்தின் 70 வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. ரஜினிகாந்த்தின் வீடு அமைந்துள்ள சென்னை போயஸ் தோட்டம் பகுதியில் நேற்று நள்ளிரவு திரண்ட ரசிகர்கள், பிரமாண்டமான கேக்கை வெட்டி தங்கள் நாயகரின் பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடினர். 

திருப்பூரைச் சேர்ந்த ரசிகர்கள், ரஜினிகாந்த்தின் சகோதரர் சத்தியநாராயணராவ் தலைமையில், 12 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.இந்நிலையில் ரஜினிகாந்தின் பிறந்த நாளை ஜப்பானில் உள்ள அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.  நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக உணவுகளை வழங்கியும், ரஜினியின் படங்களை‌ திரையிட்டு, ஆடிப்பாடியும் மகிழ்ந்தனர். 

ஆட்டோ ஓட்டுநராக உடையணிந்த ரஜினியின் ரசிகர்கள் கேக் வெட்டி உற்சாகம் அடைந்தனர். ’தலைவர் ஃபெஸ்டிவல்’ என்ற பெயரில் இந்த கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள், ரஜினிக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com