\
விநாயகர் சதுர்த்தியையொட்டி வெளியாகும் ‘அண்ணாத்த’ஃபர்ஸ்ட் லுக்?

விநாயகர் சதுர்த்தியையொட்டி வெளியாகும் ‘அண்ணாத்த’ஃபர்ஸ்ட் லுக்?

விநாயகர் சதுர்த்தியையொட்டி வெளியாகும் ‘அண்ணாத்த’ஃபர்ஸ்ட் லுக்?
Published on: 

ரஜினியின் ’அண்ணாத்த’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விநாயகர் சதுர்த்தியையொட்டி வெளியாகவுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

'தர்பார்' படத்திற்கு பிறகு நடிகர் ரஜினி ’சிறுத்தை’ சிவா இயக்கத்தில் 'அண்ணாத்த' படத்தில் நடித்து முடித்துள்ளார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 4-ஆம் தேதி படம் வெளியாகிறது.

சென்னையில் படமாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு, பின் ஹைதராபாத், மேற்குவங்கம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றதைத் தொடர்ந்து இறுதிக்கட்டப் படப்பிடிப்பு ஆகஸ்ட் 27 ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த நிலையில், வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ’அண்ணாத்த’ ஃபர்ஸ்ட் லுக் வெளியாகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com