\
ரஜினி, விஜய்க்கு நகைச்சுவை உணர்வு அதிகம்: தனுஷ் ஓபன் டாக்!

ரஜினி, விஜய்க்கு நகைச்சுவை உணர்வு அதிகம்: தனுஷ் ஓபன் டாக்!

ரஜினி, விஜய்க்கு நகைச்சுவை உணர்வு அதிகம்: தனுஷ் ஓபன் டாக்!
Published on: 

தனுஷ் நடித்துள்ள வேலையில்லாபட்டதாரி- 2 நாளை ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில் தனுஷ் முகநூல் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். 

அப்போது விஐபி-3 எடுக்கும் திட்டம் உண்டா? எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு ‘நிச்சயமாக..! விஐபி-3 உருவாக்கும் திட்டம் இருக்கிறது. ஆனால் உடனடியாக எடுக்கும் திட்டம் இல்லை. அடுத்தாண்டு இறுதியில் படத்தை தொடங்கி 2019ம் ஆண்டு ரிலீஸ் ஆக வாய்ப்பிருக்கிறது’. எனத் தெரிவித்துள்ளார்.
நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ள நடிகர் யார்? என்ற கேள்விக்கு, "எந்தவித உள்நோக்கமும் இன்றி வெளிப்படையாக சொல்வது என்றால் ரஜினி, விஜய். இருவருக்கும் நகைச்சுவை உணர்வு அதிகம். அதனால்தான் நகைச்சுவை காட்சிகளில் அவர்கள் சிறப்பாக நடிக்கிறார்கள்." என்று தனுஷ் பதிலளித்துள்ளார்.
காலா எந்த நிலையில் இருக்கிறது? என்ற கேள்விக்கு, "காலா சிறப்பாக உருவாகி வருகிறது. 60 சதவிகித படப்பிடிப்பு முடிந்து விட்டது. ரஜினி ரசிகர்கள் கொண்டாடும் படமாக காலா இருக்கும்" என அவர் பதிலளித்துள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com