படம் சுமாராக இருந்தாலும், சமூகவலைதளங்களில் மோசமாக விமர்சிக்க வேண்டாம்: ரஜினிகாந்த்

படம் சுமாராக இருந்தாலும், சமூகவலைதளங்களில் மோசமாக விமர்சிக்க வேண்டாம்: ரஜினிகாந்த்

படம் சுமாராக இருந்தாலும், சமூகவலைதளங்களில் மோசமாக விமர்சிக்க வேண்டாம்: ரஜினிகாந்த்
Published on

சுமாரான திரைப்படங்களை சமூகவலைதளங்களில் மோசமாக விமர்சிப்பதை தவிர்த்துவிட்டு, திரைத்துறையை இளைஞர்கள் மதிக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடித்துள்ள படம் ‘2.0’. ஏ.ஆர். ரகுமான் இசையில் பிரமாண்டமாக தயாராகி உள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசுகையில், “நல்ல படங்களை ஆதரியுங்கள். படத்தில் நல்லது இருந்தால், அதன் கலைஞர்களை விசாலப்படுத்துங்கள். படம் சுமாராக இருந்தாலும் சமூக வலைதளங்களில் மற்றவர்களின் மனசு நோகும்படி விமர்சனம் செய்யக் கூடாது என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இளைஞர்கள் வாழ்க்கையில் இன்புற வேண்டுமென்றால், நமது கலாச்சாரத்தையும், மரபையும் புரிந்துகொள்ள வேண்டும். கடவுள் தன் பக்கம் இல்லை என்றால், நான் இவ்வளவு வெற்றிகளைப் பெற்றிருக்க முடியாது” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com