\
ஜனவரி 25 அன்று ரஜினியின் 2.ஓ ரீலிஸ்

ஜனவரி 25 அன்று ரஜினியின் 2.ஓ ரீலிஸ்

ஜனவரி 25 அன்று ரஜினியின் 2.ஓ ரீலிஸ்
Published on

ரஜினி நடிப்பில் உருவாகிவரும் 2.ஓ படம் வெளியீடு குறித்து படக்குழுவினர் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளனர்.

ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 2.ஓ. இது எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம். முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியை அடுத்து இந்தப் படத்தை 400 கோடியில் தயாராகி வருகிறது. இதில் எமிஜாக்சன், அக்‌ஷய்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லைக்கா புரோடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இதற்கான படப்பிடிப்பு விரைவில் முடிய உள்ளது.

இந்நிலையில் இந்தப்படத்தின் ஆடியோ ரீலிஸ் அக்டோபர் 27 ஆம் தேதி துபாயிலும், படத்தின் டீஸர் நவம்பர் 27ம் தேதி ஹைதராபாத்திலும், ட்ரெய்லர் சூப்பர் ஸ்டார் பிறந்த நாளான டிசம்பர் 12ஆம் தேதி சென்னையில் வெளியிடப்பட உள்ளது. படத்தின் ரிலீஸ் 2018 ஜனவரி 25ஆம் தேதி உலகமெங்கும் திரையிடப்படும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com