’மொட்டை’ ராஜேந்திரனுக்கு ஏன் இந்த விபரீத ஆசை?

’மொட்டை’ ராஜேந்திரனுக்கு ஏன் இந்த விபரீத ஆசை?
’மொட்டை’ ராஜேந்திரனுக்கு ஏன் இந்த விபரீத ஆசை?

ஆர். முத்துக்கிருஷ்ணன் மற்றும் எம். வேல்மணி இணைந்து எம்.ஆர்.கே.வி.எஸ் சினி மீடியா சார்பாக தயாரித்துள்ள படம் ‘ஆறாம் திணை’. 

அருண்.சி என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதையின் நாயகியாக வைஷாலினி நடித்துள்ளார். மற்றும் ’மொட்டை’ ராஜேந்திரன், ரவிமரியா, லாவண்யா, குரேஷி உட்பட பலர் நடித்துள்ளனர். 

‘பேயும் பேய்சார்ந்த இடமுமாக இந்த படம் உருவாகியுள்ளது. பொதுவாக பேய்ப்படங்களில் முக்கிய அம்சமே பேய்களுக்கான பிளாஸ்பேக் தான். அந்த மரபை உடைத்து, ஒவ்வொரு காரியங்களுக்கான காரணங்களையும் படம் பார்க்கும் பார்வையாளர்கள் தாங்களாகவே உணர்ந்து கொள்ளும் விதமாக புதிய பாணியில் இதன் திரைக்கதை அமைக்கப்படுள்ளது. இது ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும். பாசிடிவ்வான எண்ணங்கள்தான் நல்ல விளைவுகளை கொடுக்கும் என்கிற கருத்தை முன்னிறுத்தி டம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் பேயை விரட்டி விரட்டி காதலிக்கும் ராஜேந்திரனின் கதாபாத்திரம் புதியதாகவும் கலகலப்புக்கு உத்தரவாதம் தருவதாகவும் இருக்கும். இவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்று ரசிகர்கள் நினைப்பார்கள். ரவிமரியாவுக்கும் இது பேர்சொல்லும் படமாக இருக்கும்’ என்கிறார் அருண்.சி.

ராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜ் கே.சோழன் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்துவிட்டது. விரைவில் ரிலீஸ் ஆகிறது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com